அக்பர் & பீர்பால் கதைகள்- புதுமையான கல்யாணம் ... AKBAR AND BIRBAL Comic Stories In Tamil

 


         புதுமையான கல்யாணம் 


    அக்பருக்கும் பீர்பாலுக்கும் ஒரு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாய் பீர்பால் அக்பரை விட்டு, மனமில்லாமல் பிரிந்து சென்றார். அரச சபையில் பீர்பால் இல்லாமல் அக்பருக்கு மிகுந்த துயரம் ஏற்பட்டது. பீர்பாலை தேடி அழைத்து வரும்படி தமது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் எங்கு பார்த்தாலும் தேடிப்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அக்பருக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. பீர்பால் தனது அறிவாற்றலால் தம்மை முன்னிலைப் படுத்தக் கூடியவராயிற்றே என்று யோசித்த அக்பர் ஒரு யோசனை செய்தார்.

    எல்லா மன்னர்களுக்கும் விநோதமான ஓலை ஒன்றை அனுப்பி வைத்தார். அதைக் கண்ட மற்ற மன்னர்கள் ஆச்சர்யம் மேலிட வியந்து போனார்கள். அந்த ஓலையில் கீழ் கண்டபடி எழுதி இருந்தது.

    'நண்பர்களே! என் நாட்டில் உள்ள கடல்களுக்கும் மலைகளுக்கும் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன்!

    தங்களது எல்லைக்குட்பட்ட கடல்களையும். மலைகளையும் எங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து திருமண விழாவினை அமர்க்களமாக நடத்திட வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

    அக்பரின் ஓலையைக் கண்ட ஒரு நாட்டு மன்னர் அக்பருக்கு பதில் ஓலை ஒன்றினை எழுதி அனுப்பினார். அன்பார்ந்த அரசர் பெருமானே! தங்களது ஓலை கிடைக்கப் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி மலைகளுக்கும் கடல்களுக்கும் தாங்கள் நடத்த இருக்கும் திருமணத்திற்கு தேவையான உதவினை செய்ய எங்கள் ஊரிலிருந்து கடல்களும், மலைகளும் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளை வரவேற்க தங்கள் நாட்டு ஏரிகளையும் குளங்களையும் ஏற்பாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

    இந்த பதிலைக் கண்டதும் அக்பர் அதிர்ந்து போனார். அடுத்த கணமே மிகவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட பதிலை பீர்பால் ஒருவரால்தான் எழுத முடியும் என்று நினைத்த அக்பர் வீரர்களிடம்  விபரத்தைக் கூறி பீர்பாலை அழைத்து வருமாறு கூறினார். வீரர்களும் பீர்பாலை அழைத்து வந்தர்கள் பிர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அக்பர் மீண்டும் பீர்பாலை தமது அரச சபையில் சேர்த்துக் கொண்டார்.

    'பீர்பால், தாங்கள் அனுப்பிய ஓலையில் எழுதி இருந்ததன் பொருள் என்ன? என்று ஆர்வத்தோடு கேட்டார் அக்பர் 'அரசே சூரிய உஷ்ணத்தில் கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி, வானத்தில் தவழ்ந்து டெல்லியை அடைந்து அங்கிருக்கும் ஏரிகள் குளங்களில் மழை பொழிய உள்ளது'என்ற அர்த்தத்தில் தான் அப்படி எழுதினேன் என்றார் பீர்பால்.



********** Thank You ************

Post a Comment (0)
Previous Post Next Post