NTSE/NMMS/TRUST-MAT MODEL QUESTION PAPER WITH ANSWER KEY 2021 PDF DOWNLOAD

NMMS 

எந்த ஒரு போட்டித் தேர்வு எழுத தயாராகும்போதும், அத்தேர்வினைப் பற்றிய முழு அறிவு அவசியம். எனவே தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்விற்கு (National Mcunis cum Merit Scholarship Exam)தயாராகும் முன்னர். NMMS தேர்வு எழுதுவதற்கான மாணவருக்கு உரிய தகுதிகள், தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வின் பகுதிகள், தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள். மாணவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், தேர்வின் மூலம் கிடைக்கும் உதவித்தொகை போன்ற விபரங்களை அறிதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பகுதி - 1 ( மனந்திறன் தேர்வு ):-


மனத்திறன் தேர்வானது காரணம் காட்சிப்படுத்தி அறியும் திறன், கண்டறியும் திறன் ஆகியவற்றைக் கண்டறிவதாகும்.

மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள் எழுத்து தொடர்கள், அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல். தனித்த எண்ணை கண்டறிதல், வென் படங்கள். ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல் சிந்தனைக் கேள்விகள். கன சதுரம் அமைத்தல் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.

பகுதி - II  ( படிப்பறிவுத் திறன் தேர்வு):-

படிப்பறிவுத் திறன் தேர்வானது (SAT) மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும்.

இத்தேர்வில் 7ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு ,சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் (மூன்று பருவங்கள்) மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்) இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

TRUST

TRSTSE (TRUST)தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் :

 8 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீதம் பெற்று தற்போது 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ / மாணவியர்கள் இத்தேர்வினை எழுதலாம். மாணவ/மாணவியர் குடியிருப்புப் பகுதியும், அவர்கள் பயிலும் பள்ளியும் ஊரகப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்தோவில் கலந்து கொள்ள இயலாது.மாணவ/ மாணவியரின் பெற்றோர் வருமானம் ரூ.1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NTSE

NTSE தேர்வின் நோக்கம்:

      மாணாக்கர்களிடையே பொதிந்துள்ள அறிவாற்றலை வெளிக்கொணரவும், பள்ளிக் கல்வியின் நரத்தை மேம்படுத்தும் பொருட்டும் இத்தேர்வுகள் உயர் நிலைக் கல்வி அளவில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுள் திறன் வாய்ந்த மாணாக்கர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித் தொகை வழங்கி மேற்படிப்பினைத் தொடர வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்




Click the Download button to download  MAT question paper














Post a Comment (0)
Previous Post Next Post