10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு

 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!!!




நடந்து முடிந்த 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் சுமார் 6 இலட்சம் பேர். விரைவில் நடைபெற இருக்கக்கூடிய துறை தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 





            கொரொனாவுக்குப் பிறகு பொதுத் தேர்வுகள் தொடங்கியதைத் தொடர்ந்து பத்து, பதினொன்றாம்,பண்ணிரெண்டாம் வகுப்பு களுக்கு  தற்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தேர்வுகள் முழுவதுமாக முடிவடைந்த இருக்கின்றன . இந்த நிலையில் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி 10,11,12ஆம் வகுப்பு தேர்வில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 457 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.






        எனவே விரைவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய துணைத் தேர்வில் பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் அனைவரையும் பங்கேற்று தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.








Post a Comment (0)
Previous Post Next Post