TRUST Exam Date 2022 Announced -DSE Proceedings

TRUST Exam Date 2022 Announced -DSE Proceedings 



Click Here PDF DOWNLOAD


அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான "ஊரகத் திறனாய்வு தேர்வு" நடைபெற்று வருகிறது.




தகுதியான தேர்வர்கள்:
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.


ஆண்டு வருமானம்:

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ, 1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தல்:

10.12.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கான வெற்று விண்ணப்பங்கைைள 26.10.2022 முதல் 05.11.2022 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 05.11.2022 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்

ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-னை பணமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 'ONLINE' -ல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தல் தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களைப் பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID, Password மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்களையும் 28.10.2022 முதல் 08.11.2022 வரை Online மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 08.11.2022 க்குள் பதிவு செய்து இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு. தெரிவிக்கப்படுகிறது. பதிவேற்றம் முடிந்த பிறகு Summary Report, பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தகுதியான மையம் அமைத்தல்:
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரால் பதிவு செய்த விவரத்தினைப் பெற்று அப்பள்ளிகள் ஊரகப் பகுதியைச் சார்ந்ததுதானா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தேர்விற்கு அரசாணை எண். 960 Education (E2) Department நாள் 11.10.91 பத்தி எண் 4(1) ல் குறிப்பிட்டுள்ளவாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) தகுதியுள்ள பள்ளிகளின் பதிவு செய்த மாணவர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பில் வைத்துக் கொண்டு தகுதியற்ற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நீக்கம் செய்ய வேண்டும். பின்னரே தேர்வு மைய இணைப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.






தேர்வு மைய இணைப்பு:

ஒரு தேர்வு மையத்தில் குறைந்த பட்சம் 300 தேர்வர்கள் இருத்தல் வேண்டும். அத்தேர்வு மையத்தில் ஒரு அறையில் 20 மாணவர்கள் எழுதும் வகையிலும், மாணவர்கள் தொலைதூரம் சென்று தேர்வு எழுதா வண்ணம் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே அனைத்து வசதிகள் நிறைந்த பள்ளியினைத் தெரிவு செய்து, இணைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். முதன்னமக் கல்வி அலுவலர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் "Click to access online portal" என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் திரையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இத்துறையால் ஏற்கனவே வழங்கியுள்ள User Id Password - ஐ பயன்படுத்தி 09.11.2022 முதல் 12.11.2022 வரை இணைப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

வினாத்தாள் கட்டுக் காப்பாளர்

முதன்மைக் கல்வி அலுவலரே இத்தேர்வுக்கு வினாத்தாள் கட்டுக் காப்பாளராக இருத்தல் வேண்டும். வினாத்தாள் சுட்டுக் காப்பாளர் தேர்வு மையங்களுக்குரிய விளாத்தாள் கட்டுக்களைத் தாங்கள் நியமனம் செய்யும் வழித்தட அலுவலரிடம் வாடகை வாகனம் மூலம் தேர்வு தொடங்க ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

தேர்வுப் பணிக்கு அலுவலர்களை நியமித்தல்

தேர்வு மையங்களுக்குரிய முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் செய்வது முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும். இத்தேர்வுப் பணிக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தேர்வுக்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர் விவரத்தினை trustexam2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2022 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தேர்வர்களுக்கு

வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்வது குறித்தான விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஊரகப்பகுதியிலுள்ள அனைத்து மேல்நிலை / இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post