12th Supplement Exam 2023 date,Application procedure,Fees

ஜூன்/ஜூலை 2023 பருவ மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்தல்

மார்ச் ஏப்ரல் 2023 பருவத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெறாத வருகை புரியாத பள்ளி மாணவர்கள் (School Candidates) தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் ஜூன் ஜூலை 2023 துணைத் தேர்வு எழுத தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று 1105.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 (புதன்கிழமை) வரையிலான நாட்களில் (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்

மார்ச்-ஏப்ரல் 2023 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் மற்றும் மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் அனைவரும் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (Govt. Examination Service Centre) 1.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 (புதன்கிழமை) வரையிலான நாட்களில் ( 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கடந்தாண்டுகளில் நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (1) தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.



சிறப்பு அனுமதித் திட்டம்

11.05.2023 ( வியாழக்கிழமை ) முதல் 17.052023 (புதன்கிழமை) வரையிலான நாட்களில் ஜூன் ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 18.05.2023 (வியாழக்கிழமை) முதல் 20.052023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000/-)

Click the below link to download full details









Post a Comment (0)
Previous Post Next Post