All About NMMS Exam

            தேசிய வருவாய்வழி மற்றும்                         திறனறித்தேர்வு (NMMS)


அறிவார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைக்களுகுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். எந்த ஒரு போட்டித் தேர்வு எழுத தயாராகும்போதும், அத்தேர்வினைப் பற்றிய முழு அறிவு அவசியம். எனவே தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்விற்கு (National Mcunis cum Merit Scholarship Exam)தயாராகும் முள்ளார். NMMS தோவு எழுதுவதற்கான மாணவருக்கு உரிய தகுதிகள், தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வின் பகுதிகள், தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள். மாணவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், தேர்வின் மூலம் கிடைக்கும் உதவித்தொகை போன்ற விபரங்களை அறிதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.






NMMS தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் :-


* அரசு / அரசு உதவி பெறும் / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுள் ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 55% மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவியர்கள் இத்தேர்வினை எழுதலாம்.(SC / ST) மாணவ / மாணனியர்கள் 50% மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதுமானது).


* மாணவ / மாணவியரின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு ரூ.1,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்,


*தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவ / மாணவியராக (Regular Student) இருக்க வேண்டும்.


தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை:-


பொதுவாக செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும் www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் விண்னாப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


தேர்வின் பகுதிகள் :-


NMMS தேர்வானது இரு பகுதிகளை (தேர்வுகளை) உள்ளடக்கியதாகும்.

பகுதி - I ( மனத்திறன் தேர்வு)-MAT

பகுதி - II (படிப்பறிவுத் திறன் தேர்வு)- SAT


பகுதி - 1 ( மனந்திறன் தேர்வு ):-


மனத்திறன் தேர்வானது காரணம் காட்சிப்படுத்தி அறியும் திறன், கண்டறியும் திறன் ஆகியவற்றைக் கண்டறிவதாகும்.

மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள் எழுத்து தொடர்கள், அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல். தனித்த எண்ணை கண்டறிதல், வென் படங்கள். ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல் சிந்தனைக் கேள்விகள். கன சதுரம் அமைத்தல் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றிறகு 4 மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். வினாவின் பொருத்தமான விடைக்குரிய எண் உள்ள பகுதியை OMR விடைத்தாளில் கருப்பு நிற பந்தமுனைப் பேனாவால் (Ball Point Pen) முழுமையாக வண்ணம் திட்ட வேண்டும்.

மனத்திறன் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா 1 மதிப்பெண் அளிக்கப்படும், அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் (Ncgative Marks ) கிடையாது.


* இத்தேர்விற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.


இத்தேர்வானது மாணவ, மாணவியர்கள் தங்கள் எதிர்காலத்தில் எழுதவுள்ள பல போட்டித் தேர்வுகளுக்கு (TRUST, NTSE, IBPS, SSC, TNPSC, RRB, UPSC, etc.) அடிப்படையாகவும், தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. மேலும் இத்தேர்வின் மூலம் மாணவ, மாணவியரின் விரிசிந்தனை. சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல், பகுத்தறியும் திறன் மேம்பவேதாம் தங்களின் வாழ்னியல் சிக்கல்களுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது.


பகுதி - II  ( படிப்பறிவுத் திறன் தேர்வு):-

படிப்பறிவுத் திறன் தேர்வானது (SAT) மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும்.

இத்தேர்வில் 7ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு ,சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் (மூன்று பருவங்கள்) மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்) இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.


* படிப்பறிவுத் திறன் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா மதிப்பெண் அளிக்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் (Negative Marks) கிடையாது.


மதிப்பெண் பங்கீடு :-

பாடங்கள்          
மதிப்பெண்கள்



கணக்கு                 -  20 மதிப்பெண்கள்
அறிவியல்            -  35 மதிப்பெண்கள்


சமூக அறிவியல் -
 
35 மதிப்பெண்கள்

மொத்தம்              -  

 90 மதிப்பெண்கள்



மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் விதம் :-

மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்வு ஆகிய இரண்டும் சேர்ந்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். SC / ST பிரிவினர் குறைந்தபட்சம் 32% மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

மாணவ / மாணவியர்கள் பெறும் உதவித்தொகை :-

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) நாடுமுழவதும் ஆண்டொன்றிற்கு 1,00,000 - மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் (வருடத்திற்கு ரூ.12000)

4 வருடங்களுக்கு ரூ.48000 அளிக்கின்றது. தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களின்

+ மனித மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின்படி 6695 மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கையானது. ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள தமிழ்நாட்டின் மக்கள்தொகை மற்றும்
அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.
 தகுதி பெற்ற 6635 மாணவர்கள் மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படுவார்கள்
(3% மாற்றுத்திறனாளிகள் உட்பட),
Post a Comment (0)
Previous Post Next Post