ஹால்டிக்கெட் தர மறுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பள்ளிக் கல்வி அதிகாரிகள்

இந்த ஆண்டு பள்ளி பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் தொடங்கவுள்ளன.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே6ஆம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 10-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டை அந்தந்த பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது .ஒரு சில பள்ளிகளில் ஹால் டிக்கெட்  வழங்க மறுக்கிறார்கள் என புகார் எழுந்துள்ளது .

மாணவர்களின் நடத்தை மற்றும் கல்வி கட்டண நிலுவை தொகையை வசூலிக்க மாணவர்களின் ஹால் டிக்கெட் தர பள்ளி நிர்வாகம் மறுப்பதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது .

அரசு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உரிய முறையில் ஹால் டிக்கெட் வழங்கப்படவேண்டும் ஹால் டிக்கெட் வழங்குவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அந்த பள்ளிகளின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் தறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஹால்டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post