10th Public Results Analysis 2022

10th public Result Analysis 2022




10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடத்தில் 3,481 பேர் சதம்!

பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர், கிட்டத்தட்ட 90.07 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றவர்கள்.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடத்தில் அதிகம்:
10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணிதப் பாடத்தில் 2,186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3,841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1,009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post