BT,PG,HM'S TRANSFER COUNCILING DATE 2022-2023

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் !!!




 பள்ளிக் கல்வித் துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அதன் ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய ஏதுவாக கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி பதவி உயர்வு கலந்தாய்வு கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை (EMIS) இணைய வழியாக நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.





11.07.2022- அரசு/நகராட்சி உயர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் (இறுதி பட்டியல்) EMIS வழியாக வெளியிடுதல்.


12.07.2022-அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு.


13.07.2022-அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் | பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு.


14.07.2022&15.07.2022 - இடைநிலை ஆசிரியர் சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.

Post a Comment (0)
Previous Post Next Post