No changes in public Exam 2022-23

அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் எதுவும் இல்லை- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.



நடப்பு ஆண்டில் அரசு பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள் வடி வமைப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதெரிவித் தார்.




2022-23-ம் கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்ட வணையை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:


நடப்பு கல்வி ஆண்டில். அரசு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பில் புதிதாக எதையும் புகுத்த வில்லை. மாற்றங்கள் செய்து,மாணவர்களுக்குகுழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக. பழைய முறையே பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு முழு பாடங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. மழை காரணமாக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டாலும், அதை ஈடுகட்டும் வகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகள். தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

ஆசிரியர்களுக்கு சுதந்திரம்

நான் ஆசிரியர்களிடம் பேசிய போது, எங்களுக்கு சுதந்திரம் தாருங்கள் என்றனர். முதல்வரின் கவனத்துக்கும் இதை கொண்டு சென்றுள்ளோம். ஆசிரியர்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கும் போது. அவர்களிடம் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

மத்திய அரசு பல்வேறு அறி வுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளம் விடு விப்பதற்கே, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அவற்றை நாங் கள் ஏற்றுக்கொண்டு வருகிறோம்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந் தாய்வில் குழப்பம் இருந்தால், ஒரு மாதத்தில் சரிசெய்யப்படும்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் வலியுறுத்தி வரு கிறோம். மாநில கல்விக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்துகேட்புக் கூட்டங்கள் டிசம்பரில் முடியும். அதற்கான அறிக்கை பெறப் பட்டதும். உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post