தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு – இனிமேல் இதற்கும் முன் பணம்!!அரசாணை வெளியீடு!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு – இனிமேல் இதற்கும் முன் பணம்!!அரசாணை வெளியீடு!!




தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மின்சார வாகனங்கள் வாங்குவதற்கும் அரசு ஊழியர்களுக்கு முன் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


அரசு ஊழியர்கள்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதேபோன்று மத்திய அரசும் தனது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த ஆண்டிலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதேபோன்று தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.6 லட்சத்திலிருந்து 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதன் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாவது குறைவதால் காற்று மாசுபாடும் குறைகிறது. இதனால் போக்குவரத்து துறையும் மின்சார வாகனங்களை அதிகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.


அத்துடன் இந்த மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு அரசு ஊழியர்களுக்கு முன்பணம் தர வேண்டும் என போக்குவரத்து துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இது தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்கள் வாங்குவதற்கும் முன்பணம் வழங்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post