+2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்- TN +2(HSE) Results postponed?

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்
-தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்




தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியனர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து தேர்வு முடிவு கணை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு சற்றுத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும் போது, “பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு முடிக் கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெற வேண்டும். இதனால், திட்டமிட்டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது.

புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post